கலைத்தாய் அறக்கட்டளை ஈரோடு

அழிவின் விளிம்பில் உள்ள மண்ணின் கலைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாகவும், பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் முயற்சியாகவும் கலைத்தாய் அறக்கட்டளை தொடர்ந்து பயணித்து வருகிறது. 30 வருட கால பாரம்பரிய கலைகளுக்கான பயிற்சி வகுப்புகள், சர்வதேச அளவிலான பல்வேறு விருதுகள், சமூக ஆளுமைகளின் பாராட்டுகள் என தொடர்கிறது கலைத்தாய் அறக்கட்டளையின் பயணம்....

Contact Info
  • கலைத்தாய் அறக்கட்டளை ஈரோடு
  • 208,கலைஞர் நகர் ,வண்டியூரான் கோவில் வீதி ,கருங்கல் பாளையம் ,ஈரோடு-638003.

Art

கலைகளின் தன்மைகள்

கலைகள் மூன்று நிலைகளை உணர்த்துகின்றன . அவை உழைப்பை வெளிப்படுத்தும் கலை , உணர்வுகளை வெளிப்படுத்தும் கலை , உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் கலை

Image

பறையாட்டம்
( குறிஞ்சி நிலம் )

குறிஞ்சி நிலத்திற்கான கலை.பறை என்றால் பரப்புதல் என்று பொருள். மக்களுக்கு செய்தியை கொண்டு சேர்க்கும் முதல் செய்தி தொடர்பு கருவி பறை.பறை இசை நீண்ட தூரம் பயணிக்கும் .மலை பகுதியில் வாழும் மக்களுக்கு செய்தியை கொண்டு சேர்க்கும் செயலை பறையாட்டம் மூலம் முன்னோர்கள் கலை வடிவத்தில் மக்களிடம் கொண்டு சென்றுள்ளனர்.

நிகழ்வுகளை ஐந்து வகையாக பிரித்துள்ளனர் தமிழர்கள்

  • திருவிழா
  • திருமணம்
  • மக்களை ஒன்றுபடுத்துவது
  • சடங்கு
  • இறப்பு

இந்த 5 வகையான நிகழ்வுகளுக்கு 5 வகை சத்தம் உள்ளது. உலகிலேயே சத்தத்தின் மூலம் நுட்பத்தை கொண்டுவந்தவர் நம் முன்னோர்களான தமிழர்கள் தான்.

சாட்டை குச்சி ஆட்டம்
( முல்லை நிலம் )

முல்லை நிலத்திற்கான ஆட்டம் சாட்டை குச்சி ஆட்டம். முல்லை நிலத்தின் மிக முக்கியமான தொழில் மாடு வளர்ப்பதும் ,மாடு மேய்ப்பதும் தான் . முல்லை நில மக்கள் மாடு மேய்ப்பதற்காக பயன்படுத்தும் கருவி சாட்டை குச்சி ஆகும் .எனவே அவர்கள் அந்த சாட்டை குச்சியை வைத்து தங்கள் பொழுதுபோக்கிற்க்காக ஒரு ஆட்டத்தினை ஆடி உள்ளார்கள் அதுதான் சாட்டைக்குச்சியாட்டம் ஆகும் .

மாடு வளர்ப்பு மற்றும் அதனை சார்ந்த தொழில், தொழில் சார்ந்த மொழி ,மொழி சார்ந்த செயல் ,செயல் சார்ந்த கலை, கலை சார்ந்த தொழில் என வழிமுறை படுத்தப்பட்டுள்ளது.

Image
Image

ஒயிலாட்டம்
( மருதம் நிலம் )

மருத நிலத்திற்க்கான ஆட்டம் ஒயிலாட்டம் ஆகும் .ஒயில் என்றால் அழகு என பொருள் .ஆண்கள் மட்டும் ஆடும் ஆட்டம் . காலப்போக்கில் பெண்களும் இணைந்து ஒயிலாட்டம் ஆட தொடங்கியுள்ளனர். உழைப்பின் வெளிப்பாடு தான் நமது கலைகள்..விவயசயத்தினை கலை வடிவமாக கொண்டது அறுவடை ஒயில். விவசாயம் செய்யும் முறையை ஒயிலாட்டம் என்ற ஆட்டத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். இம்முறை அறுவடைஒயில் என்றும் அழைக்கப்படுகிறது . ஒயிலாட்டம் அறுவடை ஒயில்,குத்து ஒயில், அலங்கார ஒயில் என வகை படுத்தபடுகிறது.

உதாரணமாக அறுவடைஒயில் ஆட்டத்தின் அடவுகள்

நிலத்தை சமன் செய்வது ,சேறடிப்பது ,நாத்து விடுவது,நாத்து நடுதல் ,இயற்கை உரம் தூவுதல்,பூச்சி எலிகளை விரட்ட பறவைகள் வருவது ,பொம்மை நடுதல் ,நெல் அறுப்பது ,மூட்டைகளை வண்டியில் ஏற்றுவது,விற்பனைக்கு இட்டு செல்லுதல் ,ஒன்றிணைந்து மகிழ்வை வெளிப்படுத்துவது...

பெரிய கம்பாட்டம்
( நெய்தல் நிலம் )

நெய்தல் நிலம் சார்ந்த ஆட்டம் பெரியகம்பாட்டம் ஆகும் .பெரியகம்பாட்டம் என்பது மீன் பிடித்தல் , படகு பயணம், கடல் பயணம் அதன் பிறகான மகிழ்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கியது. ஒரு நீண்ட பெரிய கம்பை கடலின் ஆழத்தின் உள்ளே செலுத்தி படகை தள்ளும் பொழுது படகு வேகமாக முன்னே செல்லும் இதன் அடிப்படையிலேயே பெரியகம்பாட்டம் வடிவமைக்க பட்டுள்ளது. மீன் பிடித்தல் என்னும் வாழ்வியலை ,தொழிலை எவ்வாறு செய்வது என்பதை கலையின் மூலம் வெளிப்படுத்தி உள்ளனர்.

Image
Image

கோலாட்டம்
( பாலை நிலம் )

பாலை நிலத்திற்க்கான ஆட்டம் கோலாட்டம் ஆகும் .கோல்களை தட்டிக்கொண்டே ஆடும் ஆட்டம் .வறண்ட நிலத்தில் வாழும் பொழுது நீர் குறைவாக இருக்கும் .நீர் தேவையை குறைக்க கோல்கள் மூலம் சத்தம் எழுப்பி தகவல் தெரிவிப்பது ,தகவல் தொடர்பு கொல்வது போன்றவை வறண்ட நிலமான பாலைநிலத்தின் ஆட்டம் .

பாலை நிலத்தில் பயணம் செய்பவர்கள் அதிகமாக பேசும் பொழுது உடலில் உள்ள நீர் சத்து குறையும் .உடலில் நீர் சத்து குறைந்தால் உடல் சோர்வடையும் மேலும் வறண்ட நிலத்தில் பயணம் செய்வது கடினம் .ஆகவே குச்சிகளை தட்டி செய்திகளை ,தகவல்களை சொல்லி பயணத்தை மேற்கொண்டுள்ளனர் பாலை நில மக்கள் .

கரகாட்டம்

கரகம் என்றால் குடம் மற்றும் கும்பம் என்று பொருள் .குறிஞ்சி ,முல்லை ,மருதம் ,நெய்தல் ,பாலை என அனைத்து நிலங்களுக்கும் பொதுவான ஆட்டம் கரகாட்டம் .மேலும் இது விதை பாதுகாப்பிற்க்கான ஆட்டம் .

ஆரம்பகாலத்தில் கோவில்களே விதை மற்றும் தானிய கிடங்காக இருந்துள்ளது .உழவர்கள் தானியங்களை தேவைக்கு ஏற்ப கோவில்களில் இருந்தே பெற்றுக்கொள்வார்கள் .விதைக்கு வீரியம் உள்ளதா என்பதை சோதனை செய்யவே விதை சோதனை நடத்தப்படுகிறது .

மாரியம்மன் கோவில் திருவிழாவில் விதை சோதனையை உறுதி செய்யவே பூச்சாட்டுதல் என்ற வழிமுறை உள்ளது .குடத்தில் விதையை போட்டு ஆற்றில் நீர் எடுத்து வருவது கரகம் எடுத்து ஆடுதல் ஆகும் .

Image
Image

சிலம்பம்

ஐந்து வகை நிலங்களுக்கும் பொதுவான போர்முறை கலை சிலம்பம் ஆகும் .தமிழ் எழுத்துக்களுக்கு எப்படி ஓர் கற்கும் முறை உள்ளதோ அதே போன்று சிலம்பத்திற்கும் ஓர் கற்கும் வழி முறை உள்ளது.

சிலம்பத்தில் வீடுகட்டும் போர்முறை உள்ளது .நாம் எப்படி இயற்கையில் இருந்து பாதுகாக்க ,குடியிருக்க வீடு கட்டி பாதுகாப்பாக வாழ்கிறோமோ அதே போல் சிலம்பத்தில் பதினாறு (16 வீடுகட்டும் முறை ) சுற்று முறை உள்ளது .பதினாறு சுற்று முறையில் நாம் எதிரியிடமிருந்து நம்மை பாதுகாத்து போர்செய்ய முடியும் .

சிலம்பத்தை மூன்று வகையில் பயன்படுத்துகிறோம் .( சிலம்ப விளையாட்டு ,சிலம்ப சண்டை ,சிலம்ப ஆட்டம்)

சிலம்ப விளையாட்டு முறையினை மாட்டின் வால் சுற்றும் முறையில் இருந்து கற்று விளையாடுகிறோம் .மேலும் சிலம்ப சண்டை முறையினை யானையின் தும்பிக்கை சுற்று முறையில் இருந்து கற்று சண்டையிடுகிறோம் மற்றும் சிலம்ப ஆட்டமுறையினை புலியிடம் இருந்து கற்று ஆடுகிறோம் .இந்த மூன்று விலங்குகள் தான் சிலம்பத்திற்க்கான மிக முக்கியமான ஆசிரியர்களாக பார்க்கப்படுகிறது .

சிலம்பம் மன அமைதியை கொண்டுவரும், மனம் ஒருநிலை படும் .சிலம்பம் விளையாடும் பொழுது கண்கள் திறந்திருக்கும் , சத்தங்கள் கேட்கும் ஆனால் காட்சிகள் தெரியாது எனவே சிலம்பம் விளையாடுவது ஒருவகையான தியானம் ஆகும் .எனவே சிலம்பம் விளையாடுவது தியானம் செய்வதும் ஒன்றுதான் .