கலைத்தாய் அறக்கட்டளை ஈரோடு

அழிவின் விளிம்பில் உள்ள மண்ணின் கலைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாகவும், பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் முயற்சியாகவும் கலைத்தாய் அறக்கட்டளை தொடர்ந்து பயணித்து வருகிறது. 30 வருட கால பாரம்பரிய கலைகளுக்கான பயிற்சி வகுப்புகள், சர்வதேச அளவிலான பல்வேறு விருதுகள், சமூக ஆளுமைகளின் பாராட்டுகள் என தொடர்கிறது கலைத்தாய் அறக்கட்டளையின் பயணம்....

Contact Info
  • கலைத்தாய் அறக்கட்டளை ஈரோடு
  • 208,கலைஞர் நகர் ,வண்டியூரான் கோவில் வீதி ,கருங்கல் பாளையம் ,ஈரோடு-638003.

Our Vision

கலைத்தாய் அறக்கட்டளையின் நோக்கம்

        30 ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு மாநகரின் எல்லை பகுதியான கருங்கல் பாளையம் பகுதியில் பெரிதும் வளர்ந்திடாத ஒருசில சுவர் வீடுகளை மட்டுமே கொண்டு பழமை மாறாத குடிசைகளை கொண்ட படிப்பறிவில் பின்தங்கிய சாதாரணமான ஒரு பகுதியில் சிலம்பம் பயிற்சி கொடுக்க கலைத்தாய் சிலம்ப பயிற்சி பள்ளியாக தொடங்கப்பட்டு இன்று கலைத்தாய் அறக்கட்டளையாக பரிணாமித்து ஈரோட்டின் அடையாளமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

பயிற்சியின் தொடர்ச்சியாக மண்டல போட்டியில் தொடங்கி இன்று மாவட்ட ,மாநில ,தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கு பெறுதல் மற்றும் பரிசு பெறுதல் என தொடர்கிறது நம் மாணவர்களின் வெற்றிபயணம்.

பாரம்பரியக்கலைகளுக்கான தலை சிறந்த ஆய்வுமையம் மற்றும் பயிற்சி பள்ளியினை உருவாக்குதல்.

images
images
images

பாரம்பரிய கலைகளை பயிற்சி எடுப்பது மட்டுமின்றி ,கலைகள் சார்ந்த அறிவினை பெறுவதற்காக குக்கூ குழந்தைகள் படிப்பகம் என்ற நூலகம் ஒன்றினை அமைத்து பராமரித்து வருகின்றனர்.

நமது மண்ணின் மக்களிசை பாடல்களை வளர்ந்து வரும் மாணவர்களுக்கு பயிற்றுவித்தல்.

கலைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் விதமாக பாரம்பரியகலைளுக்கான கலைநிகழ்ச்சிகள் நிகழ்த்தப்படுகிறது.

மாணவர்களிடையே கலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பள்ளி கல்லூரிகளுக்கு இடையேயான பேச்சு , கட்டுரை மற்றும் ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

கோடைகாலத்தை பயனுள்ளதாக மாற்றும் விதமாக பாரம்பரிய கலைகளுக்கான கோடைகால இலவச பயிற்சி முகாமினை கலைத்தாய் அறக்கட்டளை வருடந்தோறும் நடத்தி வருகிறது .ஒவ்வொரு வருடமும் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பாரம்பரிய கலைகளை கற்று வருகின்றனர்.

ஈரோடு மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கலைத்தாய் பயிற்சி பள்ளியினை ஆரம்பித்து அதன் மூலம் மாணவர்களுக்கு பாரம்பரிய கலைகளுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.