கலைத்தாய் அறக்கட்டளையின் செயல் பாடுகள்
30 ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு மாநகரின் எல்லை பகுதியான கருங்கல் பாளையம் பகுதியில் பெரிதும் வளர்ந்திடாத ஒருசில சுவர் வீடுகளை மட்டுமே கொண்டு பழமை மாறாத குடிசைகளை கொண்ட படிப்பறிவில் பின்தங்கிய சாதாரணமான ஒரு பகுதியில் சிலம்பம் பயிற்சி கொடுக்க கலைத்தாய் சிலம்ப பயிற்சி பள்ளியாக தொடங்கப்பட்டு இன்று கலைத்தாய் அறக்கட்டளையாக பரிணாமித்து ஈரோட்டின் அடையாளமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.
பயிற்சியின் தொடர்ச்சியாக மண்டல போட்டியில் தொடங்கி இன்று மாவட்ட ,மாநில ,தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கு பெறுதல் மற்றும் பரிசு பெறுதல் என தொடர்கிறது நம் மாணவர்களின் வெற்றிபயணம்.
பாரம்பரிய கலைகளுக்கான பயிற்சியில் ஆரம்ப நிலையாக தமிழர்களின் வீரக்கலையான சிலம்பம் மட்டும் பயிற்சி கொடுக்கப்பட்டது. அழிவின் விளிம்பில் உள்ள அனைத்து பாரம்பரிய கலைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் பாரம்பரிய கலைகளான ஒயிலாட்டம், கரகாட்டம் , சாட்டைக்குட்சி ஆட்டம் ,பறை ஆட்டம் பெரியகம்பாட்டம் ,கோலாட்டம்,பரதம்,கும்மி என அனைத்து பாரம்பரிய கலைகளும் பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.
பாரம்பரிய கலைகளுக்கான மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளை நடத்துதல்.
காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்றாற்போல் இணையவழி வகுப்புகளும் நடத்தப்படுகிறது.