கலைத்தாய் அறக்கட்டளை
அழிவின் விளிம்பில் உள்ள மண்ணின் கலைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாகவும், பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் முயற்சியாகவும் கலைத்தாய் அறக்கட்டளை தொடர்ந்து பயணித்து வருகிறது. 30 வருட கால பாரம்பரிய கலைகளுக்கான பயிற்சி வகுப்புகள், சர்வதேச அளவிலான பல்வேறு விருதுகள், சமூக ஆளுமைகளின் பாராட்டுகள் என தொடர்கிறது கலைத்தாய் அறக்கட்டளையின் பயணம்....
- கலைத்தாயின் பயணம் 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து துவங்கப்பட்டது
தொடங்கப்பட்ட ஆண்டு 2013 ஜனவரி 4
+90 996 520 3333
பயிற்சி பள்ளிகள் செயல்படும் இடங்கள்
ஈரோடு ,வெள்ளகோவில், தருமபுரி ,குளித்தலை, கோயம்புத்தூர், சூலூர் ,பவானி ,சித்தார் ,சின்னியம்பாளையம், பெருந்துறை, பள்ளிபாளையம், முள்ளாம்பரப்பு, சோலார் ,முசுறி மற்றும் இன்னும் பல இடங்கள்...
மாறுதல் என்பது சொல் அல்ல செயல்
உழைப்பை துன்பமாகவும் ஓய்வை இன்பமாகவும் கருதுவது அல்ல நம் கலை. எதை ஏற்பது ,எதை மறுப்பது என்பதில்தான் இருக்கிறது நம் முன்னேற்றம் .எதை கொண்டாடுகிறோம் .எதை புறந்தள்ளுகிறோம் என்பதில் இருக்கிறது நமது பெருமை .கலையின் பயன் மயக்குவதா அறிவூட்டுவதா ?என்பதை புரிந்து கொள்வதும் அதற்காக போராடுவதும் முக்கியம் .நமது மக்களை ஒன்றுபடுத்தவும் ,அவர்களுக்கு கல்வி அளிக்கவும் ,பகைவரை எதிர்த்து போராடவும் உதவி புரியக்கூடிய ஒரே ஆயுதம் நம் மண்ணின் மக்கள் கலைகள்தான் .
அக்கட்சி, அம்மானை, ஆற்றுவரி ,இம்பில் ,உந்தியார், ஊசல், எம்பாவை, கப்பற்பாட்டு, கழல் ,சந்துகவரி ,சாக்கை ,கிளிப்பாட்டு, குதம்பை, குயில்குறவை ,குறத்தி கூடல் ,கொச்சக சார்த்து, பந்து, பல்லாண்டு, பல்லி, பள்ளியெழுச்சி ,பாம்பாட்டி ,பிடாரன், முகம்சார்ந்து ,பொற்சுண்ணம், முகாமில் வரி ,முகவரி, மூரிசார்த்து ,வள்ளைப்பாட்டு ,சிந்து ,நொண்டிச்சிந்து ,கும்மி ,கோலாட்டம், ஆனந்தக்களிப்பு ,கீர்த்தனம்....
இப்படி நீண்டு கொண்டு செல்கிற பட்டியல் வெறும் வார்த்தைகள் அல்ல. இதுவே தமிழ் மக்களின் வாழ்க்கை, நம் முன்னோர் கண்டறிந்த கலைகள். இயற்றமிழ், இசைத்தமிழ் ,நாடகத்தமிழ் என்று கலையை போற்றிய தமிழகம் இன்று அந்த கலைகளையும் கூடவே நமது தமிழையும் தமிழர் பண்பாட்டு கலாச்சாரத்தையும் சேர்த்தே தொலைத்திருக்கிறது.
பாரம்பரிய கலைகளுக்கான மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளை நடத்துதல்.
மண்ணின் மக்களிசை பாடல்களான நாட்டுப்புற பாடல்கள் ,தாலாட்டு ,கும்மி ,ஒப்பாரி பாடல்களை சேகரித்து தொகுத்து புத்தகமாக வெளியிடுதல்.
ஒவ்வொரு பாரம்பரிய கலைகளையும் ஆவணப்படுத்தி அதற்கான புத்தகம் வெளியுடுத்தல்.